2748 கிராம உதவியாளர் பணி அறிவிப்பு

You are currently viewing 2748 கிராம உதவியாளர் பணி அறிவிப்பு

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய புதிய வேலை அறிவிப்புக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டம் படித்தவர்கள் வரை தமிழ்நாடு அரசில் வேலை செய்யலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

தற்போது, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையரான எஸ்.கே.பிரபாகர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

2748 கிராம உதவியாளர் பணி அறிவிப்பு

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களை நிரப்புவது பற்றிய பட்டியல்களை பெறப்பட்ட போது, 2,748 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த காலியிடங்கள் அதிகமாக இருப்பதால், உடனே நிரப்பப்பட வேண்டும் என்றும், நடவடிக்கைகள் அனைத்தும் தமிழக அரசின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முக்கியமாக கிராம உதவியாளா்கள் (village asistant) தேர்வுகளில் விதிமீறல் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இந்தப் பணியிடங்களை நிரப்புவதர்க்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியில் விளம்பரம் செய்ய வேண்டும். இந்த பணியிடங்களுக்கு நவம்பர் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்க்கு நவம்பர் 14 ஆம் தேதியாகவும் நிா்ணயிக்க வேண்டும். விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற வேண்டும். டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெற வேண்டும்.

2748 கிராம உதவியாளர் பணி அறிவிப்பு

வில்லேஜ் அசிஸ்டன்ட் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களின் வேலை நியமன உத்தரவுகளை வருகிற டிசம்பர் மாதம் 19 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட வருவாய்த்துறை அரசாணையை பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், இந்த கிராம உதவியாளர் பணிகளுக்கு தேர்வு செய்வதற்க்கான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு துணை ஆட்சியா் நிலையில் அதிகாரி ஒருவா் வட்டம் வாரியாக நியமிக்கப்பட வேண்டும்.

2748 கிராம உதவியாளர் பணி அறிவிப்பு

இந்த கிராம உதவியாளர் பணிக்கு நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் 100 வார்த்தைகளுக்கு மிகாமல், கிராமங்கள் குறித்த தகவல்கள், நில வகைப்பாடு, கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியா் முடிவு செய்யும் தலைப்பின் அடிப்படையில் ஒரு பத்தி எழுத அறிவுறுத்தப்பட வேண்டும்

2748 கிராம உதவியாளர் பணி அறிவிப்பு

வாசிக்கும் திறனை பொறுத்தவரை, நல்ல தரமான ஒரு புத்தகத்தை கொடுத்து அவற்றிலிருந்து ஒரு பத்தியை படிக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும். குறிப்பாக, இத்தோ்வில் இட ஒதுக்கீட்டுக்கான விதிகள் கவனமாக பின்பற்றப்பட வேண்டியது முக்கியம்.

2748 கிராம உதவியாளர் பணி அறிவிப்பு

ஆகவே, மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் வில்லேஜ் அசிஸ்டன்ட் தேர்வின் அனைத்து நடைமுறைகளையும், வட்டங்களில் வட்டாட்சியா்களையும் கொண்டு சரியான முறையில் மேற்கொள்ள உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் வருவாய் நிா்வாக ஆணையாளா் எஸ்.கே.பிரபாகா் அறிவித்துள்ளார்