Trichy Employment Camp

Trichy Employment Camp : திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 25.11.2022 வெள்ளிக்கிழமையன்று பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

Trichy Employment Camp

DistrictTrichy
Date25.11.2022
Time10.30am
Age Limit18 years to 20 years

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Trichy Employment Camp

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 25.11.2022 வெள்ளிக்கிழமையன்று பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் TATA Electronics Pvt Ltd நிறுவனத்தின் ஓசூர் ஆலைக்கு நிரந்தரமாக பணி புரிய பெண்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்நிறுவனத்தில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உயர் கல்வியினை தொடர இயலாதபெண்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000/- (PF வசதி உட்பட) வழங்கப்படும்.

மேலும் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் பணி புரிய விரும்பும் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண் வேலைநாடுநர்கள் தங்களது புகைப்படம், அனைத்து கல்வி சான்றிதழ்கள், சுயவிபரக்குறிப்பு (Resume) மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்றஎண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள் 25.11.2022 வெள்ளிக்கிழமைஅன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சித்தலைவர்திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Official websiteClick Here
Official Notification pdfClick Here

This Post Has One Comment

Comments are closed.