Coimbatore Employment Camp

Coimbatore Employment Camp :கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 27.11.2022 அன்று காலை 9 மணியளவில் பொள்ளாச்சியில் அமைந்துள்ள மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

Coimbatore Employment Camp

DistrictCoimbatore
Date27.11.2022
Time09.00am
Participating CompaniesMore than 250 Companies
VacancyMore than 15000

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Coimbatore Employment Camp

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இயக்குநர் மற்றும் மண்டல இணை இயக்குநர் அவர்களின் அனைத்து வழிகாட்டும் நெறிமுறைகளுடனும், 27.11.2022 அன்று காலை 9 மணியளவில் பொள்ளாச்சியில் அமைந்துள்ள மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் உற்பத்திதுறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டிதுறை (தகவல்துறை), ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 15000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

மேலும், இந்ததனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் (Work from home) நல்கும் நிறுவனங்களும் அதிக அளவில் கலந்துகொள்ள உள்ளன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள். பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.

இம்முகாமிற்கு வரும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் (Bio-data) மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள வயதுவரம்பு இல்லை. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வுசெய்யவுள்ளனர், இம்முகாம் மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரது மேற்பார்வையில் நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில்,

1. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கானபதிவுகளும்

2. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கானபதிவுகளும், மெய்நிகர் கற்றல் வலைதளத்திற்கான பதிவுகளும்

3.வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான பதிவுகளும்

4.அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகளும் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப் படஉள்ளது.

5.மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் உடனுக்குடன் வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login-ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.

மேலும் விவரங்களுக்கு 9790199681 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். எனவே, மனுதாரர்கள்அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Official websiteClick Here
Official Notification pdfClick Here
Registration LinkClick Here