TNPSC Group 2 & 2A Result 2022 :
TNPSC Group 2 & 2A Result 2022 :
தமிழகத்தில் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் தற்போது வரைக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது தான் வெளியாகும் என தேர்வாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
TNPSC Group 2 & 2A Result 2022 :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த குரூப் 2 தேர்வை கிட்டத்தட்ட 9.94 லட்சம் பேர் எழுதினர். அதே போல 7138 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. ஏற்கனவே, குரூப் 2 தேர்விற்கான முடிவு ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
TNPSC Group 2 & 2A Result 2022 :
மேலும், முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும், கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரைக்குமே குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாததால் தேர்வாளர்கள் முடிவினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
TNPSC Group 2 & 2A Result 2022 :
இதற்கு இடையே குரூப் 4 தேர்வு முடிவிற்கு பிறகே குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தகவல் பரவி வருகிறது. மேலும், குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானாலும் முதன்மைத் தேர்விற்கு தயாராக போதிய இடைவெளி இல்லை எனவும் தேர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
TNPSC Group 2 & 2A Result 2022 :
மேலும், முதன்மைத் தேர்விற்கு தயாராக வேண்டும் என்பதால் விரைவில் குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர் மற்றும் அனைத்து வகுப்பையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்திருந்தால் முதன்மை தேர்விற்கு தேர்வாகிவிடலாம். அதே போல, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பிரிவினர்கள் 140 கேள்விகளுக்கு சரியாக விடையளித்திருந்தால் முதன்மை தேர்விற்கு தேர்வாகலாம். மேலும், பிற பிரிவினர்கள் 147 முதல் 150 வரைக்கும் சரியாக விடையளித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Important links
Official website | Click Here |