ஊராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி அளித்தும், 2381 தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பானஅரசாணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அங்கன்வாடி 2381 சிறப்பாசிரியர்கள் வேலை அறிவிப்பு
இல்லம் தேடிக் கல்வித்’ திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம் என்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
அங்கன்வாடி 2381 சிறப்பாசிரியர்கள் வேலை அறிவிப்பு
இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது. இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000 மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடக்க கல்வியில் உள்ள ஊராட்சியில் ஒன்றிய/நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
அங்கன்வாடி 2381 சிறப்பாசிரியர்கள் வேலை அறிவிப்பு
இதுகுறித்து கல்வித்துறை சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கற்றல்-கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஒரு ஆசிபியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர் தேவைப்படுகின்றனர் எனவும், அந்த பள்ளிகளுக்கு தேவையான சிறப்பு ஆசிரியர்கள் தேவையை முன்னுரிமையாக கொண்டு தற்காலிக சிறப்பாசிரியர்களை நியமிக்கவும், அவர்களை தெரிவு செய்யப்படும் முறை மற்றும் அவர்களுக்கான பணிகளை ெதாடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
அங்கன்வாடி 2381 சிறப்பாசிரியர்கள் வேலை அறிவிப்பு
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மை குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாதபோது தொடக்க கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம்.
இந்த பணி முழுவதும் தற்காலிக அடிப்படையிலானது.
சிறப்பாசிாியர்கள் எல்கேஜி மற்றும் யுகேஜி இரு வகுப்புகளை ஒரு சேர கையாள வேண்டும்.
இந்த சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000 பள்ளி மேலாண்மை குழு மூலம் மாதம் தோறும் வழங்கிடலாம்.
இந்த சிறப்பாசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு ஜூன் முதல் ஏப்ரல் 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் ஆகும்.
இந்த சிறப்பாசிரியர்கள் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர்.
தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள்வதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியுடன் இணைந்து வழங்கிடலாம்.
பயிற்சி நிறைவுக்குப்பின் இந்த ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பணியாற்ற அனுமதிக்கலாம்.
இதற்காக பள்ளி கல்வித்துறை ரூ 13.10 கோடி ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது
அங்கன்வாடி 2381 சிறப்பாசிரியர்கள் வேலை அறிவிப்பு
இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியாது. எனவே, தகுதியானவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் உள்ள செயல்படும் அங்கன்வாடிகளை அறிந்து, அதன் தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.