TNPSC Group 4 2022 vacancy Increased : காலியாக 7,301 பதவிகள் இருந்த நிலையில் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,539 பணியிடங்கள் சேர்ப்புகுரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7,301 பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடந்தது. இந்த நிலையில் இந்த காலி பணியிடங் களுக்கான எண்ணிக்கை கூடுதலாக 2,539 ஆக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 274 பணியிடம், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 3593, இளநிலை உதவியாளர்(பிணையம்)-88, வரிதண்டலர் (கிரேடு 1)-50, தட்டச்சர்- 208, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-1024, பண்டக காப்பாளர் ஒரு பதவி என 7138 பணியிடம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர் 64 இடம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இளநிலை உதவியாளர் 43, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வரிதண்டலர் 49, 7சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியிடம் என 168 இடங்கள் உள்பட மொத்தம் 7301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடத்தியது.
TNPSC Group 4 2022 vacancy Increased
இதில் 22 லட்சத்து 2942 பேர் தேர்வு எழுதினர். இதில் பெண்கள் 12,07,457 பேர், ஆண்கள் 9,35,354 பேர், மூன்றாம் பாலினத்தவர் 131 பேர், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 பேர் ஆதரவற்றபெண்கள் , 6635 முன்னாள் படைவீரர்கள் ஆவர்.
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
TNPSC Group 4 2022 vacancy Increased
ஆனால் இந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 473 பேர் மட்டுமே(84% பேர்) எழுதினர். 3 லட்சத்து 52 ஆயிரத்து 468 பேர் (16% பேர்) தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பி எஸ்சி அறிவித்திருந்தது. இதனால், ஒரு பதவிக்கு 253 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவானது. குரூப் 4 தேர்வு முடிவை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக இறங்கியுள்ளது. விரைவில் அதற்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
TNPSC Group 4 2022 vacancy Increased
இந்த நிலையில் குரூப் 4 பணியிடங்களின் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 27.12.2022 ன் படி கூடுதலாக 2,539 பணியிடங்கள் குரூப் 4 பணியிடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குரூப் 4 காலி பணியிடங்களின் எண் ணிக்கை 9,840 ஆக உயர்ந்துள்ளது.