TNPSC Group 4 CUT OFF Mark
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
TNPSC Group 4 CUT OFF Mark
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அரசு எந்த ஒரு போட்டி தேர்வுகளையும் நடத்தாமல் இருந்தது. இதன் காரணமாக நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி சிரமப்பட்டு வந்தனர். மேலும் தேர்வுக்கு ஏற்கனவே தயாராகி வந்தவர்கள் தேர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தமிழக அரசு போட்டி தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கியது.
To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .
TNPSC Group 4 CUT OFF Mark
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 2 & 2A தேர்வுகள் நடத்தப்பட்டது. இதை அடுத்து கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த தேர்விற்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 18.05 லட்சம் பேர் மட்டுமே தேர்வினை எழுதி உள்ளனர். இந்த ஆண்டு தேர்வானது கடந்த ஆண்டை போல் இல்லாமல் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
TNPSC Group 4 CUT OFF Mark
மேலும் தேர்வு முடிந்து 2 மாதங்கள் ஆன நிலையில் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த தகவல்களும் பரவலாக வெளியாகி வருகின்றன.
TNPSC Group 4 CUT OFF Mark
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் TNPSC தேர்வுகளில் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழில் படிக்க சிரமப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புகள் இருப்பதாக கல்வி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.