10402 தமிழக அரசு காலிப்பணியிடங்கள் – அரசாணை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2021-2022 சட்டமன்ற ஆளுநர் உரை அறிவிப்பு அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்கள் நிரப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல(பமே2)த் துறை

அரசாணை (நிலை) எண். 32 நாள் 20.04.2022 ,சுபகிருது வருடம்.

அனைத்து துறை செயலர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள்.

ஆணை:

2021-2022-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகுஆளுநர் உரையில் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டது.

”அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்புமுகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பப்படும்”

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link

2. ஆளுநர் அறிவிப்பு தொடர்பாக, 22:12.2021 அன்று தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 27(ரின்படி பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பம் செய்தல் தெரிவு முகமைகள் (Recruitment Agency) மூலமாக நடைபெறும் தொடர் நிகழ்வு என்பதால், தெரிவு முகமைகளால் வழங்கப்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள், வரும் ஆண்டின் பணியாளர் தேர்வின்போது (Recruitment) நிரப்பப்படும் என தெரிவு முகமைகளால் தெரிவிக்கப்பட்டது.

3. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பங்கேற்பு அனைத்து நிலையிலும் உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 27(h)ன்படி, அனைத்து தலைமைச் செயலகத் துறைகளிடமிருந்து தொகுதிவாரியாக (Groupwise) உறுதி செய்யப்பட்டு, பெறப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில், அரசுப் பணிகளில் ஆதிதிராவிடருக்கான பிரதிநிதித்துவம் 8173 இடங்களும் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் 2229 இடங்களும் குறைவாக (Shortfall) காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Tamilnadu Jobs & Govt News – 10402 Vacancy

4. சட்டமன்ற ஆளுநரின் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்த, தலைமைச் செயலக துறைகளிடமிருந்து தொகுதிவாரியாக (Groupwise) உறுதிசெய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8173 இடங்களும் பழங்குடியினருக்கு 2229 இடங்களும் ஆக மொத்தம் 10402 துறைவாரியாக இணைப்பில் உள்ளவாறு) கண்டறியப்பட்ட குறைவுப் பணியிடங்களை (Shortfall) தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 27(h)ன்படியும், மற்றும் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளால் தெரிவு முகமைகள் மூலமாக நிரப்பம் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்து, அரசுஅவ்வாறே ஆணையிடுகிறது.

5. தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 மற்றும் அரசாணை (நிலை) எண்.91, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள் 28.11.2001-ன்படியும், குறைவுப் பணியிடங்களை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி நிரப்ப ஆணையிடப்படுகிறது.

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

(i) ஒவ்வொரு தொகுதிகளிலும் காணப்படும் கீழ்நிலைப்பதவிகள் (நேரடி நியமனப் பதவிகள்) மற்றும் தற்போதைய காலிப் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட தலைமைச் செயலக துறைகள் மற்றும் தலைமை அலுவலகங்கள் மூலமாக சரியாக கணக்கிட்டு வழங்க இயலும் என்பதால், தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 27(ன்படி சம்பந்தப்பட்ட தலைமைச் செயலக துறைகள்மூலமாக உரிய செயல் ஆணை (Executive Order) சம்பந்தப்பட்ட தெரிவுமுகமைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

(ii) தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 27(h)ன்படி, அனைத்து துறைகளிலும் தொகுதி அ, ஆ, இ மற்றும் ஈ (Group A, B, C and D) வாரியாக காணப்படும் குறைவுப் பணியிடங்களை (Shortfall) அத்தொகுதியில் கீழ்நிலையிலுள்ள நேரடி நியமன பதவிகளில் (Direct appointment in lower level post in each of the Group) நியமிக்கப்பட வேண்டும். மேலும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணியிடங்களில் காணப்படும் குறைவுப் பணியிடங்களை அப்பதவிகளிலேயே நியமனம் மேற்கொள்ளலாம்.

(iii) தொகுதி வாரியாக கண்டறியபட்ட குறைவுப் பணியிடங்களை அத்தொகுதியின் கீழ்நிலையிலுள்ள நேரடி நியமன பதவிகளில் நியமிக்கும் பொருட்டு துறைத்தலைவர் தலைமையிலான குழுவினை உருவாக்கி, அத்தொகுதியில் காணப்படும் குறைவுப் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் போன்றவற்றினை கணக்கில் கொண்டு ஆய்வு செய்து உரிய செயல் ஆணை (Executive Order) தெரிவு முகமைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளால் வழங்கப்பட வேண்டும். இது துறை தலைமை அலுவலகங்கள், சார்பு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் என இடஒதுக்கீட்டினை பின்பற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

Tamilnadu Jobs & Govt News – 10402 Vacancy

(iv) காலிப்பணியிடங்கள் இல்லாத நேர்வுகளில், குறைவுப் பணியிடங்களை நேரடி நியமனப் பதவிகளில் நியமனம் மேற்கொள்வதற்கு, வரும் ஆண்டுகளில் உருவாகும் காலியிடங்களின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளத்தக்க வகையில் ஆணைகள் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டு,நிரப்பப்பட வேண்டும்.

(v) குறைவுப் பணியிடங்களை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பம் செய்ய அனைத்து தெரிவு முகமைகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பு ஆட்சேர்ப்புமுகாம் (Special Recruitment Drive) மூலம் அனைத்து பதவிகளும் நிரப்பம் செய்ய இயலாத நேர்வினில் குறைந்த அளவிலான குறைவுப் பணியிடங்கள் உள்ள பதவிகளுக்கு) தெரிவு முகமைகள் உரிய முடிவுகளை மேற்கொண்டு நிரப்பம் மேற்கொள்வதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றி நிரப்பம் செய்யலாம்.

(vi) ஒரே பதவியில் குறைவுப் பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப்பணியிடங்கள் காணப்படும் நேர்வினில், தெரிவு முகமைகளால் முதற்கண் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பம் செய்து, பின்னர் வேறுபாட்டினை (Difference) குறைவுப் பணியிடங்களில் நிரப்பம் செய்யலாம்.

6. இணைப்பில் உள்ள குறைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்பம் செய்து உரிய அறிக்கையினை இத்துறைக்கு அனுப்பவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிடப்படுகிறது.

(ஆளுநர் ஆணைப்படி)

க.மணிவாசன் அரசு முதன்மைச் செயலாளர்

Tamilnadu Jobs & Govt News – 10402 Vacancy

S.Noதுறையின் பெயர்குறைவுப் பணியிடங்கள்
ஆதிதிராவிடர்
குறைவுப் பணியிடங்கள்
பழங்குடியினர்
1ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை00
2வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை1940
3கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை038
4பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை1621
5வணிகவரி மற்றும் பதிவுத்துறை0117
6கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை1565
7எரிசக்தி துறை44228
8சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை2108
9நிதி துறை4509
10கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை1302
11மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை173305
12உயர்கல்வி துறை2531
13நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை0314
14உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை6861229
15வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை0508
16தொழில்துறை860
17தகவல் தொழில் நுட்பவியல் துறை0301
18தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை3925
19குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை0401
20நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை4439
21மனிதவள மேலாண்மைத்துறை00
22திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை00
23பொதுதுறை0301
24பொதுப்பணி துறை மற்றும் நீர்வளத்துறை5437
25வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை030
26ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை0875
27பள்ளிக் கல்வி துறை446249
28சமுக சீர்திருத்த துறை00
29சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை00
30சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை00
31தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை2616
32சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை1609
33போக்குவரத்து துறை184721
34மாற்றுத் திறனாளிகள் நலத் துறை163
35இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை31
36சட்டத்துறை05
37சட்டமன்ற பேரவைச் செயலகம்01
மொத்தம்81732229

This Post Has 8 Comments

  1. V SUBATHRA

    NO.27 EDUCATIONAL DEPARTMENT

  2. V SUBATHRA

    HI

  3. அமுதபிரியா

    எப்போது விண்ணப்பம் விண்ணப்பிக்க வேண்டும். தேதி அறிவிப்பு எப்போது வரும்.

    1. அமுதபிரியா

      விண்ணப்பம் விண்ணப்பிக்க கடைசி என்ன தேதி. அதற்கான லிங்க் அனுப்புங்க சார்.

  4. Ishwarya

    How to apply sir

  5. M.Ragavarthana

    How to apply for this backlock vacancies.because iam one of b.arch degree holder, already I have registered unemployment office..

  6. M.Ragavarthana

    How to apply for this sc/st backlock vacancies in tamilnadu,I have completed b.arch degree course,and registered in employment office.any information.please send to my gmail address..

  7. A. Gunaseelan

    Epom thaan notification varum???

Comments are closed.